உணவகங்களில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – முதல்நாளே சிக்கிய நபர்

உணவகங்களில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை - முதல்நாளே சிக்கிய நபர்
Shin Min Daily News and Google Maps

சிங்கப்பூரில் உள்ள அனைத்து உணவக நிலையங்கள், காபி கடைகள் மற்றும் உணவு அங்காடிகளில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் தங்கள் தட்டுகள் மற்றும் கப்புக்கள் என அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இல்லையெனில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரொனால்டோ சிங்கப்பூர் வருகை – ரசிகர்கள் ஆரவாரம்

ஜூன் 1, 2023 முதல், அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவை தெரிவித்தன.

இந்நிலையில், அமலாக்க நடவடிக்கை தொடங்கிய முதல் நாளிலே, 80 வயது முதியவர் முதலாவதாக எழுத்துப்பூர்வ எச்சரிக்கையை பெற்றுள்ளார்.

ஜூன் 1, அன்று சைனாடவுன் காம்ப்ளக்ஸ் ஃபுட் சென்டரில் NEA அமலாக்க அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அங்கு 80 வயது முதியவர் சாப்பிட்ட பிறகு தனது தட்டை கொண்டு போய் ஒப்படைக்கவில்லை என்றும் ஷின் மின் செய்தி கூறியுள்ளது.

அவ்வளவு விரைவாக அதிகாரிகளிடம் பிடிபடுவோம் என்பதை அவர் சற்றும் சிந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் முதல் முறை குற்றவாளி என்ற எழுத்துப்பூர்வ எச்சரிக்கையைப் பெற்றார்.

தெரிந்துகொள்வோம்

ஜூன் 1 முதல், பயன்படுத்திய தட்டுகள் மற்றும் கப்புகளைத் திருப்பித் தராத நபர்களின் விவரங்களை அமலாக்க அதிகாரிகள் சேகரிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் முறை இந்த தவறை செய்யும் நபர்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கையும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களுக்கு அபராதம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வரை, அவ்வாறு செய்யத் தவறிய நபர்களிடம் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – ஜூன் முதல் அமல்: மீறினால் 30 ஆண்டுகள் சிறை, 15 பிரம்படி