தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளி!

Video Crop Image

தனது திருமணத்தில் கலந்துக் கொள்ள சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளியை செண்டை மேளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து மரியாதைச் செலுத்தியிருக்கிறார் தொழிலாளர் ஒருவர்.

மலேசியாவில் உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு!

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் சிங்கப்பூரில் சுமார் 17 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். திருமணத்திற்கு தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரை மாரிமுத்து அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து, திருக்கட்டளைக்கு வந்த தனது முதலாளியைக் கவுரவிக்கும் விதமாக, செண்டை மேளங்கள் முழங்க, உறவினர் புடைச்சூழ ஊர்வலமாக அழைத்து வந்தார் மாரிமுத்து. திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர், பள்ளிக்கு ரூபாய் 50,000ஐ நன்கொடையாக வழங்கினார்.

UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

பின்னர், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த சிங்கப்பூர் முதலாளி.