UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

File Photo

பிப்ரவரி 21- ஆம் தேதி அன்று இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.

UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் இனி UPI ID-யைக் குறிப்பிட்டு எளிமையான முறையில் பணம் அனுப்பலாம்.

இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையைத் தொடங்கி வைத்த இந்திய, சிங்கப்பூர் பிரதமர்கள்!

ஷாப்பிங், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI மூலம் பணம் அனுப்புவது மிகவும் பாதுகாப்பானது. 24 மணி நேரமும் தங்கு தடையின்றிப் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

மலேசியாவில் உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு!

இந்தியாவின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பமான UPI தற்போது சிங்கப்பூர், ஓமன், பிரான்ஸ், மலேசியா, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், சவூதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

இந்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, UPI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் மேற்கண்ட நாடுகள்.

UPI- PayNow இணைப்பால் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.