இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையைத் தொடங்கி வைத்த இந்திய, சிங்கப்பூர் பிரதமர்கள்!

Photo: PMO of India

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனையான UPI மற்றும் சிங்கப்பூரின் டிஜிட்டல் பரிவர்த்தனையான PayNow இணைக்கப்பட்டுள்ளது. UPI மற்றும் PayNow இணைப்பு முறையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொடங்கி வைத்தனர்.

ஊழியர்களே இல்லாமல் இயங்கும் அமைப்பு – புதிய அணுகுமுறை

UPI- PayNow இணைப்பால் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் நாட்டினர் பயனடைவர். அதேபோல், சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் பணத்தை அனுப்ப, இவை உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காணொளி மூலம் இன்று (பிப்.21) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர் ரவி மேனன் மற்றும் இரு நாட்டு பிரதமர்கள் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சாமி தரிசனம்!

நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “UPI மற்றும் PayNow இணைப்பு என்பது சிங்கப்பூர் மற்றும் இந்தியா குடிமக்கள் ஆவலுடன் காத்திருந்ததற்கான ஒரு பரிசு. இதற்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள்:

கடந்த சில ஆண்டுகளில், புதுமை மற்றும் நவீனமயமாக்கலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது. நமது டிஜிட்டல் இந்தியா திட்டத்தால், எளிதாக வணிகம் செய்ய முடியும். இதனுடன், டிஜிட்டல் இணைப்பைத் தவிர, நிதி உள்ளடக்கமும் ஒரு உந்துதலைப் பெற்றுள்ளது.

“6 மாதங்கள் வரை வேலை இல்லை” – பட்டதாரி ஊழியர்களுக்கு ஏற்பட்ட சோதனை

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் நம்மை பல வழிகளில் இணைக்கிறது. ஃபின்டெக் (Fintech) என்பது மக்களை ஒருவருக்கொருவர் இணைக்கும் ஒரு துறையாகும். பொதுவாக, அது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்றைய வெளியீடு எல்லை தாண்டிய ஃபின்டெக் இணைப்பின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம், ஆட்சி மற்றும் பொது சேவை வழங்கலில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தங்களை சாத்தியமாக்கியுள்ளது. இதுவே இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பலம், கோவிட் காலகட்டத்தில், கோடிக்கணக்கான மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய முடிந்தது” எனத் தெரிவித்தார்.