ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பிரம்மோத்சவம் விழா!

Photo: Hindu Endowments Board

சிங்கப்பூரில் உள்ள 2001 லோர் 8 தோவா பயோஹ்- க்கில் (2001 Lor 8 Toa Payoh) அமைந்துள்ளது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயிலில் பிரம்மோத்சவம் விழா (Brahmothsavam Prayers) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.23- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

அதன்படி, வரும் ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று காலை 07.00 மணிக்கு நித்ய பூஜை, காலை 08.15 மணிக்கு கணபதி ஹோமம், காலை 09.30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, காலை 09.45 மணிக்கு ஸ்ரீ விநாயகர் அபிஷேகம், காலை 10.15 மணிக்கு கலசாபிஷேகம், காலை 10.40 மணிக்கு தீபாராதனை, காலை 10.45 மணிக்கு வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம், மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 05.30 மணிக்கு ஸ்ரீ காளியம்மன் சக்தி கரகம், மாலை 06.30 மணிக்கு நித்ய பூஜை, இரவு 07.30 மணிக்கு பூச்சொரிதல், இரவு 09.00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறவிருக்கிறது.

துபாயில் இருந்து சென்னைக்கு இப்படியும் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி (வைரலாகும் வீடியோ)

ஏப்ரல் 25- ஆம் தேதி முதல் மே 6- ஆம் தேதி வரை ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. எந்தெந்த நாட்களில் எத்தனை மணிக்கு என்னென்ன பூஜைகள் என்பது குறித்து அறிந்துக் கொள்ள https://heb.org.sg/events/svkt_250423/?lang=ta என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்தானா பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என அறிவிப்பு”- காரணம் என்ன?

மே 5- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.