“இஸ்தானா பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என அறிவிப்பு”- காரணம் என்ன?

Photo: Istana Open House

சிங்கப்பூர் அதிபர் மாளிகை (President Of the Republic Of Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நோன்புப் பெருநாள் மற்றும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் மே 1- ஆம் தேதி அன்று இஸ்தானா மாளிகை பொதுமக்களுக்கு திறக்கப்படும். அன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை இஸ்தானா திறந்திருக்கும்.

“பாஸ்போர்ட், விசா தொடர்பான சேவைகளில் புதிய மாற்றங்கள்”- இந்திய தூதரகம் அதிரடி அறிவிப்பு!

இந்த மாதத் தொடக்கத்தில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் திறந்து வைத்த புதுப்பிக்கப்பட்ட அன்னக் குளத்தையும் (swan pond) பொதுமக்கள் பார்வையிடலாம். நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். அதேபோல், சிங்கப்பூரர்களுக்கும், நிரந்தரவாசிகளுக்கும் நுழைவுக் கட்டணம் இலவசம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. அதனை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.23- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

அன்றைய தினம் தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்காக இஸ்தானா மாளிகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.