“பாஸ்போர்ட், விசா தொடர்பான சேவைகளில் புதிய மாற்றங்கள்”- இந்திய தூதரகம் அதிரடி அறிவிப்பு!

Photo: High Commission Of India in Singapore

“சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் மற்றும் சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சேவை தொடர்பான விண்ணப்பங்களை எந்தவித முன்பதிவும் இன்றி சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் (Appointment) தேவையில்லை என்ற போதிலும், கூட்டம் இருக்கும் பட்சத்தில் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும். வேலை நாட்களில் நாளொன்றுக்கு 50 விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்” என்று சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Photo: High Commission of India in Singapore

சிங்கப்பூரில் நிகழ்ந்த அரிய சூரிய கிரகணத்தைப் பார்த்து வரும் மக்கள்!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.blsindia.sg/index.php என்ற ‘BLS Singapore’ என்ற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கப்பூரில் உள்ள நான்கு மையங்களில் நேரடியாக அணுகியும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது சேவைகளைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணமாக கியூபா சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லை என்ற அறிவிப்பால், விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை; காத்திருக்கும் நேரம் குறையும். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அனைத்து அலுவலகங்களிலும் அப்பாயிண்ட்மெண்ட் முறைக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.