சாலையில் சண்டையிட்டு கொண்ட 10 பேர்.. வீடியோ வைரல் – அனைவரையும் தேடி வரும் போலீஸ்

Katong Square சதுக்கத்திற்கு வெளியே ஏற்பட்ட சண்டை தொடர்பான காட்சிகள் ஆன்லைனில் வெளியானது, அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமூக-அரசியல் வலைத்தளமான The Independent Singapore பேஸ்புக் பக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) காலை வெளியான அந்த வீடியோ, ஏழு மணி நேரத்தில் 11,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!

இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை Today-விடம் தெரிவித்துள்ளது.

“Katong Square சதுக்கத்தில் சண்டை, காரில் இருந்து ஆயுதத்தை எடுக்கும் நபர்…” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், 10 பேர் சாலையில் ஒன்று கூடி சண்டையில் ஈடுபடுவதைக் காணலாம்.

அதே வேளையில், கறுப்பு உடையில் இருக்கும் இரண்டு பெண்கள் அந்த சண்டையை தடுக்க முயல்கின்றனர்.

சண்டைக்கான காரணம் என்ன அல்லது அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் முன்னர் தெரிந்தவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சிலேத்தர் நார்த் லிங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஆடவர் – மோசமான பகுதி என நெட்டிசன்கள் காட்டம்