விதிகளை மீறிய 22 உணவு-பான கடைகளை மூட உத்தரவு!

Enterprise Singapore

டிசம்பர் தொடக்கத்தில் இருந்து COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 22 F&B கடைகளை மூட உத்தரவிடப்பட்டது மற்றும் 11 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊடக வெளியீட்டில் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) புதன்கிழமை (டிசம்பர் 15) இதனை தெரிவித்தது.

ஊழியர் உட்பட 3 பேருக்கு Omicron கிருமி வகை அடையாளம்

ION ஆர்ச்சர்ட் ஷாப்பிங் மாலில் உள்ள இரண்டு உணவகங்கள், தற்காலிகமாக மூட அல்லது அபராதம் விதிக்கப்பட்ட உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களின் பட்டியலில் அடங்கும்.

ION ஆர்ச்சர்ட் மாலில் அமைந்துள்ள Violet Oon Singapore மற்றும் TCC ஆகிய இரண்டும் வாடிக்கையாளர் குழுக்களுக்கு இடையே குறைந்தபட்சம் 1மீ தூரம் பாதுகாப்பு இடைவெளியை உறுதி செய்யத் தவறியதால், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 24 வரை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான தொடர்பைக் குறைக்கத் தவறியது மற்றும் இசை காணொளிகளை வளாகத்திற்குள் இயக்கியது போன்ற விதி மீறல்களிலும் கடைகள் ஈடுபட்டன.

விதி மீறிய 11 கடைகளுக்கு தலா S$1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.

விரைவு சோதனை நிலையங்களில் சுய ART சோதனைகளுக்கு கட்டணம் எவ்வளவு?