சிங்கப்பூரில் “buck moon” என்னும் சூப்பர் மூனை காண அரிய வாய்ப்பு – எங்கே, எப்போது காணலாம்?

buck-moon-singapore
Heather Wilde/Unsplash

Supermoon என்று அழைக்கப்படும் நான்கில் ஒன்றான “buck moon”ஐ சிங்கப்பூரில் நம்மால் காண முடியும்.

வரும் ஜூலை 3ஆம் தேதி அன்று buck moon என்னும் பெரும் முழுநிலவை இரவு நேரத்தில் காணமுடியும் என சொல்லப்பட்டுள்ளது.

கட்டுமான ஊழியர் விளையாட்டாக செய்த செயல்… அவருக்கே வினையாய் அமைந்தது – S$3,500 அபராதம்

இந்த ஆண்டில் பூமிக்கு மிக நெருக்கமாக தோன்றும் இரண்டாவது பெரிய Supermoon இது என்று அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதாவது பூமியில் இருந்து சுமார் 362,000 கிமீ தொலைவில் இந்த buck moon காட்சியளிக்கும்.

வெறும் கண்ணால் நம்மால் காண முடியும் என்றும், தொலைநோக்கியை பயன்படுத்த தேவை இருக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

எப்போது தோன்றும்?

சிங்கப்பூர் முழுவதும் ஜூலை 3 அன்று இரவு 9 மணி முதல் buck moon நிலவை தடையின்றி நீங்கள் காணலாம் என அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

எங்கே காணலாம்?

மெரினா பேரேஜ், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா மற்றும் Southern Ridges போன்ற பொது திறந்தவெளி பகுதிகளில் அதனை காணலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இலவச விசா ரத்து – இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு விசா ஆன் அரைவல்: அறிவிப்பு வெளியிட்ட நாடு