Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்

Budget 2024 foreign workers
Pic: AFP

Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக இனி S$1,600 கொடுக்க வேண்டும் என பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

முன்னர் அது S$1,400 ஆக இருந்த நிலையில், 14 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

அதே போல ஒரு மணிநேரத்திற்கு S$9 வெள்ளி என இருந்த பகுதிநேர ஊதியம் விரைவில் S$10.50 வெள்ளியாக வழங்கப்பட உள்ளது.

அதிகரித்து வரும் ஊதிய வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தனது பட்ஜெட் உரையில் இன்று (பிப். 16) தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் உள்ளூர் ஊழியர்களுக்கு தகுதி ஊதியத்தை (LQS) வழங்க வேண்டும்.

இந்த புதிய மாற்றங்கள் வரும் ஜூலை 1, 2024 முதல் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது