மாடி விளிம்பில் நின்ற பெண்… பத்திரமாக மீட்ட SCDF – குவியும் பாராட்டு

bukit-batok-scdf-rescue-person
SCDF

புக்கிட் பாத்தோக்கில் உள்ள HDB பிளாக்கின் மாடி விளிம்பில் நின்று கொண்டிருந்த 74 வயதுப் பெண் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கடந்த ஜூன் 17 அன்று மாலை நடந்த இந்த சம்பவம் நடந்தது, தகவல் அறிந்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) அதிகாரிகள் விரைந்து சென்று அவரை பத்திரமாக மீட்டனர்.

இலவச விசா ரத்து – இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு விசா ஆன் அரைவல்: அறிவிப்பு வெளியிட்ட நாடு

இந்த துரித மீட்பு நடவடிக்கை பொதுமக்களின் வெகுவான பாராட்டைப் பெற்று வருகிறது.

அன்று மாலை 5:25 மணியளவில் பிளாக் 210A புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 21ல் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF உறுதிப்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து, எந்தவித காயமும் இன்றி அவரை பத்திரமாக மீட்டது.

இதில் பாதுகாப்பு வலைகளும் பயன்படுத்தப்பட்டது, மீட்கப்பட்ட அவர் சுயநினைவுடன் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் மனநலம் தொடர்பான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஆண்டின் நடுப்பகுதி, ஊழியர்களுக்கு போனஸ் – சிலருக்கு S$400 வரை கூடுதலாக கிடைக்கும்