சிங்கப்பூர் கல்லறைகளில் “பேய்கள் எச்சரிக்கை” பலகை – உண்மை என்ன?

bukit-brown-cemetary-ghost-sign
Jermone Fs/Facebook

சிங்கப்பூர் கல்லறைகளில் “பேய்கள் எச்சரிக்கை” என்ற பலகை அனைவருக்கும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இங்கு பேய்கள் இருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் அந்த அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.

வெளிநாட்டு ஊழியர்களை ரோட்டில் வைத்து தாக்கும் ஆடவர் – வெளியான வீடியோ: தகவல் கேட்கும் அமைப்பு

புக்கிட் பிரவுன் பகுதியில் உள்ள கல்லறையில் காணப்பட்டதாகக் கூறப்படும் அந்த அறிவிப்பு பலகையில் மரங்கள் விழுதல், குளவிகள் மற்றும் பாம்புகள் போன்ற எச்சரிக்கையும் இருந்தன.

அந்த புக்கிட் பிரவுன் கல்லறை அதிகாரப்பூர்வமாக 1973 இல் மூடப்பட்டது.

இந்நிலையில், பேய்கள் குறித்த அந்த ஒட்டுப்படம் (stickers) போலியானது என்றும், அது நாசகாரர்களின் குறும்புச் செயல் என்பதையும் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அது போன்ற அனைத்து ஒட்டுப்படங்களும் அகற்றப்பட்டதாக NEA கூறியது.

உண்மையான படம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் NEA படத்தையும் வெளியிட்டுள்ளது.

Hong Bao Toto குலுக்கலின் பிரம்மாண்ட முதல் பரிசு.. 4 டிக்கெட்டுக்கு அடித்த அதிஷ்டம் – கோடிகளை அள்ளிய இருவர்