புக்கிட் மேராவில் அதிகரித்துவரும் தொற்று சம்பவங்கள்; தளர்வுகள் குறித்து அமைச்சர் வோங் மறுபரிசீலனை.!

(photo: mothership)

சிங்கப்பூர் புக்கிட் மேராவில் கொரோன தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து அண்மையில் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் COVID-19 சிறப்புக்குழுவானது இரண்டாம் கட்ட பொருளியல் தளர்வுக்கான அளவு மற்றும் நேரம் குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளுடன், முதல் கட்ட தளர்வுகள் தற்போது சிங்கப்பூரில் உள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். ஜூலை 21 முதல் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அண்மையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பொருளியல் தளர்வுக்கான கால அளவு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது. புதிய தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்தது எதிர்பாராத ஒன்று என பல அமைச்சகங்களை உள்ளடக்கிய அந்தப் சிறப்புப் பணிக்குழுவின் இணைத்தலைவரான திரு வோங் தெரிவித்துள்ளார்.

நிலவி வரும் இந்த பேரிடர் காலத்தை எதிர்கொண்டு வாழ்வது மிகவும் சவாலான ஒன்று தான், அதை சிறந்த முறையில் கட்டுக்குள் வைக்க அணைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்படும் என அமைச்சர் லாரன்ஸ் கூறியுள்ளார்.