புக்கிட் மேரா வியூ பிளாக்கில் தீடீரென தீ விபத்து.! (காணொளி)

Bukit Merah fire breaks
Pic: SCDF

சிங்கப்பூரில் நேற்று (20-08-2021) மாலை 117, புக்கிட் மேரா வியூவில் உள்ள 14வது மாடி குடியிருப்பில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (SCDF) உடனடியாக விரைந்தனர், தீ விபத்து குறித்து இரவு 7.30 மணி அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக SCDF கூறியுள்ளது.

முகக்கவசம் அணிய மறுத்த ஆடவர்: சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிய சிங்கப்பூர்…நிரந்தர தடையும் விதிப்பு.!

தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு அந்த பிளாக்கிற்குள் நுழைந்தனர், பின்னர், தண்ணீர் ஜெட் உதவி மூலம் வீரர்கள் தீயை அணைத்தனர்.

அங்கு, தீ விபத்து ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 முதல் 16 வது மாடி உள்ள சுமார் 50 குடியிருப்பாளர்கள் SCDF மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

காணொளி

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நிலவனப்பைப் பராமரிக்கும் தொழிலாளர்களுக்கு 6.3% வருடாந்திர ஊதிய உயர்வு!