முகக்கவசத்தை சரியாக அணியுமாறு வலியுறுத்திய பேருந்து ஓட்டுநரைத் திட்டிய பயணிக்கு அபராதம் விதிப்பு!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20- ஆம் தேதி அன்று இரவு 07.30 PM மணியளவில் சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ரீஸல் அப்துல்லா (Mohamed Reezal Abdullah) (வயது 49) என்பவர், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான 10 என்ற எண் கொண்ட பேருந்தில் ஏறி பயணம் செய்தார். இந்த பேருந்து இரண்டு அடுக்குகளைக் கொண்டது. மேல் தளத்திற்கு சென்று இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். அப்போது, முகமது ரீஸல் அப்துல்லா முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருந்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 90 பேர் பத்திரமாக வெளியேற்றம்!

இதனை சிசிடிவி காட்சி மூலம் பார்த்த பேருந்தின் ஓட்டுநர் சுவா கியா பூன் (வயது 61) (Chua Khea Boon), பேருந்தை நிறுத்திவிட்டு, மேல் தளத்திற்கு சென்று பயணி முகமது ரீஸல் அப்துல்லாவிடம் முகக்கவசத்தை சரியாக அணியும்படி வலியுறுத்தினார். இந்த நிலையில் பயணி முகமது ரீஸல் அப்துல்லா ஓட்டுநரை பின் தொடர்ந்து, அவரது இருக்கைக்கு சென்று அநாகரிகமான வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அந்த பேருந்தை நிறுத்தி பயணி மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பேருந்து ஓட்டுநரை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியது நிரூபிக்கப்பட்டது.

சைக்கிளோட்டிகளுக்காக ‘Google Maps’- ல் புதிய அம்சம் அறிமுகம்!

இதையடுத்து, இவ்வழக்கு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (09/11/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, பயணி முகமது ரீஸல் அப்துல்லாவுக்கு நீதிமன்றம், பொதுச் சேவை ஊழியருக்கு எதிரான தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, அந்த பயணி மீது அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சுமார் 3,500 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளி தனது கடமையைச் செய்யும் போது, ​​பொதுச் சேவை ஊழியர் மீது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, முகமது ரீஸல் அப்துல்லாவுக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் (அல்லது) அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.