சைக்கிளோட்டிகளுக்காக ‘Google Maps’- ல் புதிய அம்சம் அறிமுகம்!

Photo: LTA Official facebook page

சிங்கப்பூரில் சைக்கிளிங் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைக்கிளிங் என்பது ஒருவகை உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியால் சைக்கிளோட்டிகளின் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. மேலும், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

சிங்கப்பூரில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!

சிங்கப்பூரில் சைக்கிளிங் செல்வதற்கென்று தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை மட்டுமே சைக்கிளோட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சைக்கிளோட்டிகளின் வசதிக்காக ‘Google’ நிறுவனம் தனது ‘Google Maps’ செயலி மற்றும் இணையதள பக்கத்தில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் சைக்கிளோட்டிகளுக்கென்று ‘Google Maps’-ல் தனி நேவிகேஷன் (Navigation) என்ற புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு சைக்கிளோட்டிகள் தங்களுக்கான பாதையைக் கண்டறிந்து சைக்கிளிங் செல்லலாம்.

ஒன்றாக கூடியதாக 10 பேரிடம் போலீசார் விசாரணை – காயம் ஏற்படுத்தியதாக ஒருவர் கைது

சிங்கப்பூரில் 6,000 கி.மீ.க்கும் அதிகமான பல்வேறு சைக்கிளிங் பயணப் பாதைகளை, இந்த புதிய வசதியின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். அதேபோல், பாதுகாப்பான முறையில் சைக்கிளிங் மேற்கொள்ள முடியும்.

சுமார் 500 கி.மீ. சாலைகள் மற்றும் பாதைகள் பற்றிய தரவுகளை ‘Google’ நிறுவனத்திற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய பூங்கா வாரியமும் வழங்கியது. கடந்த 2019- ஆம் ஆண்டில் இருந்து 2020- ஆம் ஆண்டு வரை ‘Google’ இணையதளத்தில் சைக்கிள் பாதைகளைத் தேடுவோர் விகிதம் 400% அதிகரித்துள்ளதாக தகவல் கூறுகின்றன.

வியட்நாமுக்கு 2 லட்சம் ART கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர்

‘Google Maps’ செயலி ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் கணினியில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதன்முறையாக, சைக்கிளோட்டிகளுக்கான பயணப் பாதையைத் துல்லியமாகக் காட்டும் புதிய வசதியை ‘Google Maps’ சிங்கப்பூரில் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.