வியட்நாமுக்கு 2 லட்சம் ART கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர்

MFA

சுமார் 200,000 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகள், 500,000 நாசோபார்னீஜியல் என்னும் மூக்குவழி திரவம் எடுக்கும் கருவி மற்றும் 100,000 பாஸ்பேட் பஃபர்டு உமிழ்நீர் ஆகியவற்றை சிங்கப்பூர் வியட்நாமுக்கு வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) கூறுகையில்; 14வது சிங்கப்பூர்-வியட்நாம் இருதரப்பு ஆலோசனைகளின் (SVBC) போது அவை ஒப்படைக்கப்பட்டன.

ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில் சதி திட்டம் – சிங்கப்பூர் தம்பதிக்கு சிறை

சிங்கப்பூர் MFAவின் நிரந்தர செயலாளர் சீ வீ கியோங் மற்றும் வியட்நாமின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் Nguyen Quoc Dung ஆகியோரால் அந்த அடையாள ஒப்படைப்பு விழா நடத்தப்பட்டது.

இருதரப்பு ஆலோசனைகள் வீடியோ கான்பரன்சிங் எனும் இணையம்வழி நடத்தப்பட்டன, மேலும் சீ மற்றும் டங் இணைந்து அதற்கு தலைமை தாங்கினர்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூர்-வியட்நாம் இடையே மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களின் பரஸ்பர பங்களிப்புகளில் இந்த அன்பளிப்பும் ஒரு பகுதியாகும் என்று MFA அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்