இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தொற்றுநோய் சூழல் கட்டுக்குள் இருப்பதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வகை பட்டியலை சிங்கப்பூர் மாற்றியமைத்துள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் திங்கள்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தார்.

சிங்கப்பூர்-மலேசியா இடையே தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான தனிமை இல்லா சிறப்பு பயணம்

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, உள்ளிட்ட 23 நாடுகளுக்கான தொற்றுநோய் வகைப்பாடு 4லிருந்து 3க்கு மாற்றப்பட்டுள்ளன.

அதாவது இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இருந்து வருவோர் குறிப்பிட்ட இடத்தில் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள (SHN) வேண்டும்.

தற்போது, ​​அத்தகைய பயணிகளுக்கு PCR சோதனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், நவம்பர் 11ஆம் தேதி இரவு 11.59 மணி முதல், புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு நிபுணத்துவரீதியாக நிர்வகிக்கப்படும் இடங்களில் எடுக்கப்பட்ட ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) நெகடிவ் முடிவையும் சிங்கப்பூர் ஏற்கும்.

கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற பல ஆசியான் நாடுகளுக்கான தொற்றுநோய்க்கான வகைப்பாடு மூன்றிலிருந்து இரண்டாக மாற்றப்படும் என்று திரு ஓங் கூறினார்.

கூடுதலாக, லாவோஸ் (Laos), மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான வகைப்பாடு நான்கிலிருந்து மூன்றாக மாற்றப்படும்.

இது பிராந்திய நாடுகளுடன் சிங்கப்பூரின் எல்லைகளைத் மீண்டும் திறக்க வாய்ப்பளிப்பதாக திரு ஓங் கூறினார்.

இந்த மாற்றங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 11) இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஊழியர் சொந்த ஊரில் தற்கொலை – தொடரும் விசாரணை