சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஊழியர் சொந்த ஊரில் தற்கொலை – தொடரும் விசாரணை

Photo Credit : The Economic Times

திருச்சியை சேர்ந்த 27 வயதான சேட் முகமது சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். இவரின் தந்தை முகமது அலி ஜின்னா.

கடந்த ஆறு மாதத்துக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊரான திருச்சிக்கு சேட் முகமது திரும்பினார். இதில் அவருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் பாதிப்பும் இருந்துள்ளது.

இந்திய வம்சாவளி ஆடவருக்கு தூக்கு தண்டனை – சிங்கப்பூர் திட்டவட்டம்

இந்த நோய் காரணமாக கடுமையாக அவதிப்பட்ட அவர், அதனால் மன உளைச்சலுக்கும் ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் கடந்த மாதம் எலி பேஸ்ட் மற்றும் தூக்கமாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதனை அடுத்து உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சேட் முகமது பரிதாபமாக கடந்த மாதம் உயிரிழந்தார்.

தற்கொலைக்கு வேறு எதும் காரணமுள்ளதா? என்ற கோணத்தில் அப்பகுதி போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட ஆடவர் உயிரிழப்பு