இந்திய வம்சாவளி ஆடவருக்கு தூக்கு தண்டனை – சிங்கப்பூர் திட்டவட்டம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான உலகளாவிய அழைப்புகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் அரசாங்கம், அதனை மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 33 வயதான நாகேந்திரன் கே தர்மலிங்கம் சாங்கி சிறையில் வரும் புதன்கிழமை தூக்கிலிடப்பட உள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட ஆடவர் உயிரிழப்பு

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான காஸ்வே இணைப்பில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 21, அவரது தொடையில் போதைப்பொருள் பொட்டலத்தை கடத்தியதாக கூறப்படுகிறது.

2009ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெராயின் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ததாக நாகேந்திரனுக்கு 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பான சட்டத்தின்கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் இறக்குமதி செய்யப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

போதை பொருள் கடத்தலின்போது அவருக்கு மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதனால் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும் மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.

ஆனால், அவர் திட்டமிட்டு தான் இதை செய்ததாக சிங்கப்பூர் தரப்பில் கூறப்படுவதாகவும் ஊடகங்கள் கூறியுள்ளன.

வெளிநாட்டு பயணிகளுக்கு பாஸ்போர்ட்டில் கைமுறை முத்திரைகள் படிப்படியாக நிறுத்தப்படும் – ICA