சிங்கப்பூர்-மலேசியா இடையே தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான தனிமை இல்லா சிறப்பு பயணம்

(Photo: Ministry of Home Affairs)

சிங்கப்பூர்-மலேசியா இடையே நவம்பர் 29 முதல் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான சிறப்பு பயணத் திட்டம் (VTL) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் இடையே VTL சிறப்பு விமானங்கள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 8) இரு நாட்டு தலைவர்களும், அதாவது பிரதமர் லீ சியென் லூங் மற்றும் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோர் தொலைபேசியில் பேசிய பிறகு, கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஊழியர் சொந்த ஊரில் தற்கொலை – தொடரும் விசாரணை

COVID-19 சூழலில் இரு நாடுகளிலும், குடும்பங்களைப் பிரிந்து மக்கள் வாடுவதையும், அதே போல தொடர்புகள் இல்லாததையும் இரு நாட்டு பிரதமர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரு நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும், கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணத்தை பாதுகாப்பான முறையில் மீண்டும் தொடங்குவதற்கு இது சரியான நேரம் என பிரதமர்கள் சுட்டிக்காட்டினர்.

குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL அனுமதி விண்ணப்பங்கள் நவம்பர் 22 அன்று துவங்கும்.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

VTLன் கீழ், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையே பயணிக்க முடியும்.

மேலும், தனிமைப்படுத்தல் அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றுவதற்கு பதிலாக COVID-19 சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஊழியர் சொந்த ஊரில் தற்கொலை – தொடரும் விசாரணை