வெளிநாட்டு ஓட்டுனருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

பேருந்து முனையத்தில் பல பேருந்துகளின் விபத்துக்கு காரணமாக இருந்த ஓட்டுநருக்கு S$2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், இரண்டு பயணிகளுக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக வாகனம் ஓட்ட ஒரு ஆண்டு காலம் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை பின்னோக்கிச் ஓட்டிய போது, ​​ஓட்டுநர் சரியாகக் கவனிக்கத் தவறி மற்றொரு பேருந்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டிகளை இலவசமாக காணுங்கள்: 300 அங்குல திரை… 500 பேர் வரை என்ஜாய் பண்ணலாம்

இதனால் இரண்டாவது பேருந்தின் ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து மூன்றாவது பேருந்துடன் மோதினார்.

இந்த சங்கிலி மோதல் காரணமாக இரண்டு பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் கால் விரலில் கண்ணாடித் துண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அலட்சியமான செயலுக்கான குற்றச்சாட்டை, SBS ட்ரான்சிட் பேருந்து ஓட்டுநர் மாஹ் ஜின் ஹெங் (39) நேற்று (டிசம்பர் 6) ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் கடந்த 2021 ஆண்டு நவம்பர் 27 அன்று இரவு சுமார் 10 மணியளவில் பாசிர் ரிஸ் பேருந்து முனையத்தில் நடந்தது.

மாஹ் மலேசியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் டிச.12 முதல் தடுப்பூசி போடப்படும் – யார்யாருக்கு..?