போதையில் பேருந்துகளைத் தாக்கிய நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை!

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் வசித்து வருபவர் சீன நாட்டைச் சேர்ந்த ஜு ஹோங்லு (Zhu Honglu) (வயது 32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிட தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு நவம்பர் 21- ஆம் தேதி அன்று மாலை 06.00 PM மணியளவில் தனது வீட்டில் அவர் ஏழு கேன் பீரை அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், நவம்பர் 22- ஆம் தேதி அன்று அதிகாலை 01.30 AM மணியளவில் உட்லேண்ட்ஸ் தொழிற்பேட்டையில் (Woodlands Industrial Park) உள்ள பணிமனைக்கு (Woodlands depot) வெளியே நடுரோட்டில் நின்றார். அப்போது அவ்வழியே ஒரு எஸ்எம்ஆர்டி (SMRT) நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து வருவதைக் கண்டு, கத்திக் கொண்டே பேருந்தைப் பின்தொடர்ந்து ஓட்டினார்.

சிங்கப்பூரில் மேலும் 1,461 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, பேருந்தின் முன்புற கண்ணாடியைத் துடைப்பானைப் பிடித்து இழுத்து, கண்ணாடியை உடைக்க முயன்றுள்ளார். அதேபோல், பேருந்தின் கதவுகளைத் திறக்க முயன்றார். எனினும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. சிறிது நேரம் கழித்து அவ்விடத்தை விட்டு வெளியேறினார் ஜூ ஹோங்லு. பின்னர், 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தை தாக்கினார்.

பேருந்து ஓட்டுநரைக் கூச்சலிட்டும், பேருந்து ஓட்டுநரின் பக்கம் இருந்த கண்ணாடியைப் பிடித்து இழுத்துக் கழற்றினார். அதனைக் கொண்டு மற்ற கண்ணாடியை உடைக்க முயன்று பல கீரல்களை ஏற்படுத்தினார்.

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மலேசிய நாட்டு கடற்படை தளபதி சந்திப்பு!

இந்த நிலையில், இச்சமபவத்தை அறிந்த எஸ்எம்ஆர்டி ஊழியர் அலுவலகத்தில் (SMRT Operations Office) இருந்த தொலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த போதை நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது பேருந்துகளைத் தாக்கியது, பொது இடத்தில் தொந்தரவு செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, ஜூ ஹோங்லு தாக்கிய முதல் பேருந்தில் எந்தவித சேதமும் ஏற்படாத நிலையில், இரண்டாவது பேருந்தில் கண்ணாடி உடைப்பு போன்ற சேதங்கள் ஏற்பட்டது. அப்பேருந்து உடனடியாக பழுது பார்க்கப்பட்டது. இதற்கு 6,200 சிங்கப்பூர் டாலர் செலவானது எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டுள்ளது. இந்த செலவுக்கான தொகையை முழுவதுமாக, நடப்பாண்டு செப்டம்பர் 6- ஆம் தேதி அன்று எஸ்எம்ஆர்டியிடம் வழங்கினார்.

இந்தியா-சிங்கப்பூர் பயணிகள் வணிக விமான சேவை: நெருக்கமாகப் பணியாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (22/11/2021) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூ ஹோங்லு மீது இரண்டு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து, அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.