தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் நிறுத்தப்படவுள்ள சில பேருந்து சேவைகள் – பயணிகள் அதிருப்தி

Bus service 167 cease
File Photo Via SBS Transit

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவைகளை பயணிகள் அதிகமானோர் பயன்படுத்துவதால், சில பேருந்து சேவைகள் வரும் டிசம்பர் 10 முதல் நிறுத்தப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

செம்பவாங், அப்பர் தாம்சன், நொவீனா, ஆர்ச்சர்ட், மத்திய வணிக வட்டாரம் மற்றும் புக்கிட் மேரா போன்ற பகுதிகளை இணைக்கும் பேருந்து சேவை 167 விரைவில் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் லாட்டரியில் இலகுவாக வெல்ல… ஜோசியம் பார்த்து “4D அதிஷ்ட எண்கள்” கொடுக்கும் ஆடவர்

மேலும், 859, 167, 980 மற்றும் 75 ஆகிய பேருந்து சேவைகள் மாற்றியமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, SBS டிரான்சிட் மூலம் இயக்கப்படும் சேவை 162 மற்றும் 162M ஆகியவை ஒரே சேவையாக செயல்படும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பிரிவுகளில் செல்லும் சில பேருந்து சேவைகளில் 30 முதல் 40 சதவிகிதம் வரை பயணிகள் குறைந்துள்ளதாக LTA கூறியுள்ளது.

பயணிகள் சிலர் இதற்கு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

“பிளாஸ்டிக் பையில் கடல் உயிரினம்” – இரவு நேரத்தில் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் – விருதை தட்டி தூக்கிய சிங்கப்பூரர்