“பிளாஸ்டிக் பையில் கடல் உயிரினம்” – இரவு நேரத்தில் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் – விருதை தட்டி தூக்கிய சிங்கப்பூரர்

"பிளாஸ்டிக் பையில் கடல் உயிரினம்" - இரவு நேரத்தில் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் - விருதை தட்டி தூக்கிய சிங்கப்பூரர் - Nature-Photographer-of-the-Year
Nature Photographer of the Year

S’porean wins nature photography award: பிளாஸ்டிக் பையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கடல் உயிரினத்தை புகைப்படம் எடுத்து பரிசை தட்டிச்சென்றார் சிங்கப்பூர் புகைப்படக்கலைஞர்.

இரவு நேரத்தில் எடுக்கப்படும் “பிளாக்வாட்டர் டைவிங்” என்னும் முறையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊழியரை கீழே தள்ளிவிட்டு, மோசமாக நடந்துகொண்ட விலையுயர்ந்த காரின் உரிமையாளர் – கொதித்தெழுந்த நிறுவனம்

“மனிதனும் இயற்கையும்” என்ற பிரிவின்கீழ், 2023 ஆம் ஆண்டின் சிறந்த இயற்கை புகைப்படக் கலைஞருக்கான விருதை (NPOTY) அவரின் புகைப்படம் வென்றுள்ளது.

இந்த ஆண்டு 96 நாடுகளில் இருந்து சுமார் 21,474 புகைப்படங்களை அது பெற்றுள்ளது.

அதில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தேர்வு பெரும் வெற்றியாளருக்கும் €500 (S$730) ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது, ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு €3,000 (S$4,380) பரிசு கிடைக்கும்.

29 வயதான Toh Xing Jie என்ற அவர், “The Sad Poncho” என்ற தலைப்பில் அந்த புகைப்படத்தை சமர்ப்பித்தார்.

Nautilus உயிரினம் பிளாஸ்டிக் பையில் ஒட்டிக்கொண்டிருப்பதை அது சித்தரிக்கிறது, அதை ஜெல்லிமீன் என்று தவறாக நாம் நினைக்கலாம்.

மனிதனின் நடவடிக்கையால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை இந்த புகைப்படம் காட்டுகிறது என்றார்.

ஆடவர் ஒருவரை கடித்த மலைப்பாம்பு.. கட்டுமான ஊழியருடன் சேர்ந்து பாம்பை பிடித்தபோது நடந்த விபரீதம்