இந்திய ஊழியரை கீழே தள்ளிவிட்டு, மோசமாக நடந்துகொண்ட விலையுயர்ந்த காரின் உரிமையாளர் – கொதித்தெழுந்த நிறுவனம்

Indian worker lorry accident
Shin Min Daily News

Indian worker lorry accident: ஈஸ்ட் கோஸ்ட் அருகே இரண்டும் வாகனங்கள் மோதி கொண்டதில், கார் ஓட்டுநர் லாரி ஓட்டுனரை தள்ளிவிட்டு மோசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

நேற்று நவ.16 அன்று மாலை 4:30 மணியளவில் ஈஸ்ட் கோஸ்ட் டிரைவ் மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் டெரஸ் இடையேயான சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

விபத்துக்குப் பிறகு பதிவான புகைப்படத்தில் பென்ட்லி கார் சேதமடைந்ததைக் காணமுடிகிறது.

மேலும் லாரியின் முன்புறமும் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர், லாரி ஓட்டுனரை தள்ளிவிட்டு அவரை நோக்கி மோசமாக திட்டத் தொடங்கினார்.

இதனால் மனமுடைந்த லாரி ஓட்டுநர் அதனை நிறுவனத்தில் சொல்ல, நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் ஓட்டுநர் போலீசில் புகார் பதிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், லாரி ஓட்டுநர் மருத்துவரை சந்தித்ததாகவும், மூன்று நாள் விடுப்பு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“எங்கள் ஊழியர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகக்கூடாது” என்று லாரி ஓட்டுனரின் மேலாளர் கூறினார்.

பென்ட்லி ஓட்டுநர் ஒரு வெளிநாட்டவர் என்றும், அவர் சீன மனைவியுடன் இருந்தார் என்றும் அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.

மேலும், லாரி ஓட்டுநர் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் விவரித்தார்.

யார் மீது தவறு இருந்தாலும், ஒருவரை தாக்கி அவமானப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சிங்கப்பூரில் அதிரடி தள்ளுபடி விற்பனை.. துணிகள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி