சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

Changi Airport/Facebook

Singapore travel advisory: சிங்கப்பூர் வரும் மற்றும் செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் சில குறியீடு கொண்ட ஆடைகளை அணிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளின் வழி பயணம் செய்வோர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பான குறியீடு/ சின்னங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அறிவுறுத்துகிறது.

இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக காலம் தங்கிய இருவருக்கும் சிறை

பொது வெளியில் அதுபோன்ற ஆடைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஆண்டு இறுதி பயண ஆலோசனையில் அது தெரிவித்துள்ளது.

இதற்கு, முன்னர் சாங்கி விமான நிலைய குழுமம் இந்த அறிவுரையை பயண ஆலோசனையாக வெளியிட்டது.

அவ்வாறு ஆடைகள் அணிந்து வருபவர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுக்கப்படலாம் என அது கூறியுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

கட்டுமான தளத்தில் அதிக இரைச்சல்.. மெத்தையை வைத்து ஜன்னலை மூடும் குடியிருப்பாளர்களின் நிலை