கட்டுமான தளத்தில் அதிக இரைச்சல்.. மெத்தையை வைத்து ஜன்னலை மூடும் குடியிருப்பாளர்களின் நிலை

mrt-construction-noise-prompts-complaints-ang-mo-kio-residents
Stomp

MRT கட்டுமான தளத்தில் அதிக இரைச்சல் ஏற்படுவதாக ஆங் மோ கியோ குடியிருப்பாளர்களிடம் இருந்து புகார்கள் எழுவதாக கூறப்பட்டுள்ளது.

கடும் இரைச்சலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவர் தன் வீட்டின் ஜன்னலை மறைக்க மெத்தையைப் பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக காலம் தங்கிய இருவருக்கும் சிறை

பிளாக் 424 ஆங் மோ கியோ அவென்யூ 3 க்கு முன்னால் கட்டுமான பணிகள் நடந்துவருவதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக, அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு இரவும் பணிகள் நடப்பதாக ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் கூறினார்.

நள்ளிரவு 3.30 மணிக்கும், இரண்டு கிரேன்கள் இயங்குவதைக் காட்டும் வீடியோவையும் அவர் ஸ்டாம்புடன் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அறிவதாக கூறிய LTA செய்தித் தொடர்பாளர், “தேவையிருப்பின் பணிகளில் கூடுதல் மாற்றங்களைச் செய்ய ஒப்பந்தக்காரர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்” என கூறினார்.

பொதுவாக, சனிக்கிழமை அல்லது பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 7 மணி வரை கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது.

சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்