சிங்கப்பூரில் அதிரடி தள்ளுபடி விற்பனை.. துணிகள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி

Singapore offer sales upto 80% -
SCWO

Singapore offer sales upto 80 percent : சிங்கப்பூரில் தனது ஆண்டு இறுதி அதிரடி தள்ளுபடி விற்பனையை மீண்டும் கொண்டு வந்துள்ளது New2U Thrift Shop.

இந்த முறை, முன்பை விட பெரிய அளவிலும் உங்களுக்கு பிடித்தமான சிறந்த பொருட்களும் அங்கு இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

நாளை நவம்பர் 17 முதல் 19 வரை சிறந்த பொருட்களை தள்ளுபடி விலையில் தட்டிச்செல்லும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

அதாவது பொருட்களுக்கு 80 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடி உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனையில் S$1 வெள்ளிக்கும் பொருட்கள் உண்டு.

இந்த Thrift Shop கடை secondhand என்னும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறது.

அங்கு துணிகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆபரணங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாங்கலாம்.

இந்த கடை சிங்கப்பூர் பெண்கள் அமைப்பின் (SCWO) கீழ் இயங்குகிறது, எனவே நீங்கள் அங்கு செலவிடும் ஒவ்வொரு பொருளுக்கான ஒவ்வொரு டாலரும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமண மற்றும் குழந்தை ஆதரவு தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவாக கொடுக்கப்படும்.

பின்வரும் தேதிகளில் New2U Thrift Shop கடையில் இந்த பஜார் இயங்கும்

நவ.17 முதல் நவ.18 – காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பஜார் இயங்கும்.

நவ.19 மட்டும் – காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பஜார் இயங்கும்.

96 வாட்டர்லூ ஸ்ட்ரீட்டில் (96 Waterloo Street) அந்த கடைஇயங்கி வருகிறது.

இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக காலம் தங்கிய இருவருக்கும் சிறை