ஆடவர் ஒருவரை கடித்த மலைப்பாம்பு.. கட்டுமான ஊழியருடன் சேர்ந்து பாம்பை பிடித்தபோது நடந்த விபரீதம்

Python bites man in Singapore
Shin Min Daily News

Python bites man in Singapore: பிளாக் 66 கல்லாங் பாருவில் உள்ள காபி கடை அருகே முதியவர் ஒருவரை மலைப்பாம்பு கடித்ததில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று (நவ.16) நடந்த இந்த சம்பவத்திற்கு முன்னதாக, காபிஷாப்பில் இருந்து சுமார் 5 மீ தொலைவில் உள்ள வடிகாலில் இருந்து அந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய ஊழியரை கீழே தள்ளிவிட்டு, மோசமாக நடந்துகொண்ட விலையுயர்ந்த காரின் உரிமையாளர் – கொதித்தெழுந்த நிறுவனம்

அந்த மலைப்பாம்பு காபி கடைக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில், கட்டுமான ஊழியர் உட்பட அங்கிருந்த சிலர் சுமார் 20 நிமிடங்கள் செலவழித்து அந்த பாம்பை வெளியே கொண்டு வந்து பிடித்ததாக சீன நாளிதழிடம் ஊழியர் தெரிவித்தார்.

அப்போது, ​​​​மலைப்பாம்பை பிடித்திருந்த முதியவர் அதை விட எண்ணியபோது திடீரென அது அவரது கையை பதம்பார்த்தது, இதனால் அவருக்கு இரத்தம் வெளியானது.

இதனை அடுத்து, ACRES அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்டனர்.

முதியவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பொதுமக்கள் வனவிலங்குகளை எதிர்கொண்டால் ACRES வனவிலங்கு மீட்பு எண்ணை (9783 7782) தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்