பேருந்து சேவைகள் தொடர்பாக எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

Photo: SBS Transit Official Facebook Page

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகள் போன்ற பொதுபோக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit). இந்நிறுவனம் வழங்கி வரும் பேருந்து மற்றும் ரயில் சேவையில் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

130- வது ஆண்டை நிறைவு செய்த ஷெல் நிறுவனத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து!

எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் நவம்பர் 27- ஆம் தேதி முதல் நவம்பர் 29- ஆம் தேதி வரை சில சாலைகள் மூடல்களால் ஏழு பேருந்து சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தை பேருந்துகள் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 70M, 111, 133, 162M மற்றும் 502 ஆகிய பேருந்து சேவைகள் வரும் நவம்பர் 27- ஆம் தேதி அன்று அதிகாலை 01.00 AM மணி முதல் 06.00 AM மணி வரையும், காலை 10.00 மணி AM முதல் மாலை 05.00 PM மணி வரையும், நவம்பர் 28- ஆம் தேதி அன்று அதிகாலை 04.00 AM மணி முதல் மாலை 04.00 PM மணி வரையும், ‘Temasek Boulevard’ என்ற சாலையில் உள்ள ‘Suntec Convention Centre’ (பேருந்து நிறுத்த குறியீடு- 02151) என்ற பேருந்து நிறுத்தத்தைத் தவிர்த்து, மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்படும்.

சிங்கப்பூரில் மேலும் 1,275 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அதேபோல், 24 மற்றும் 38 பேருந்து சேவைகள் வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் காலை 08.00 AM மணி முதல் அதிகாலை 01.00 AM மணி வரையும், ‘Upper Changi Road East’ என்ற சாலையில் உள்ள ‘Expo Halls 1/2/3’ (பேருந்து நிறுத்த குறியீடு- 96029) என்ற பேருந்து நிறுத்தத்தைத் தவிர்த்து, மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800-287-2727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.