இனி இந்த ஊழியர்களுக்கு 7 நாள் PCR சோதனை முறை, N95 முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு கட்டாயம்

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

வெளிநாடுகளில் Omicron Covid-19 கிருமி வேகமாகப் பரவி வருவதால், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, தடுப்பூசி போடப்பட்ட பயணப் திட்டத்தின்கீழ் (VTL) பயணிகளின் வருகையை நிர்வகிப்பதற்கும், மேலும் சிங்கப்பூர் சமூகத்திற்கு ஏற்படும் கிருமி ஆபத்தைக் குறைப்பதற்கும் முனைப்பான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை CAAS எடுத்து வருகிறது.

Breaking: VTL விமான, பேருந்து புதிய டிக்கெட் விற்பனை நிறுத்தம்

அதன்படி, முன்னணி விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானப் பணியாளர்களைப் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று CAAS இன்றைய (டிசம்பர் 22) செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

விமான ஊழியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்

சிங்கப்பூர் வரும் பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து விமான நிலைய ஊழியர்களுக்கும் N95 முகக்கவசங்கள் மற்றும் முகக் காப்பு (face shields) உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கப்படும்.

இது டாக்ஸி ஸ்டாண்டுகள் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.

அனைத்து முன்னணி விமான நிலைய ஊழியர்களும் தற்போதைய ஏழு நாள் ART வழக்கமான சுழற்சிக்கு பதிலாக, ஏழு நாள் PCR வழக்கமான சோதனைக்கு (RRT) உட்படுத்தப்படுவார்கள்.

அதிக தொற்று ஆபத்துள்ள முன்னணி விமான நிலைய ஊழியர்களுக்கு, ஏழு நாள் PCR சோதனைச் சுழற்சிக்கு இடைப்பட்ட மூன்றாவது நாளில் மேற்பார்வையின்கீழ் ART சோதனை மேற்கொள்ளப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடிகள் நீட்டிப்பு!!