சிங்கப்பூரில் டாக்ஸி தீப்பற்றி எரிந்த விபத்தில் ஓட்டுநர் பலி..!

Cabby dies after taxi catches fire along Seletar West Link
Cabby dies after taxi catches fire along Seletar West Link (Photo: Facebook / SG Road Vigilante - SGRV)

சிங்கப்பூரில் 58 வயதான ComfortDelGro டாக்ஸி ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இன்று (மார்ச் 31) தனது வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சிலேட்டார் வெஸ்ட் லிங்கில் எச்சரிக்கப்பட்டதாகவும், மேலும் சம்பவ இடத்தில் ஓட்டுநர் சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) துணை மருத்துவர் உறுதி செய்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 96% நுழைவாயில்களில் ERP சாலை கட்டணங்கள் குறைப்பு..!

இதில் ஓட்டுநர் அவரது டாக்ஸிக்கு வெளியே காணப்பட்டார் என்றும், தீக்காயங்கள் அவருக்கு ஏற்பட்டதாகவும் ComfortDelGro குழு தலைமை நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி திருமதி டம்மி டான் தெரிவித்துள்ளார்.

இந்த தீயை அணைக்க இரண்டு வாட்டர் ஜெட் விமானங்களை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று SCDF தெரிவித்துள்ளது.

மேலும் போலீஸ் விசாரணைகளும் நடந்து வருகின்றன.

தங்கள் டாக்ஸி ஓட்டுனரின் திடீர் இறப்பு அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக டான் குறிப்பிட்டுள்ளார்.

தீக்கிரையாகிய டாக்ஸி இந்த மாதம் 19ஆம் தேதி வாகனச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வாகனம் சுமார் மூன்றரை ஆண்டு மட்டுமே இயங்கியதாகவும் கூறப்படுகிறது.

SCDF விசாரணைகளுக்கு ComfortDelGro ஒத்துழைப்பு தருவதாக, திருமதி டான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19 பரவல் மோசமடைந்தால் 3வது ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிக்க சிங்கப்பூர் தயார்..!