COVID-19: சிங்கப்பூரில் 96% நுழைவாயில்களில் ERP சாலை கட்டணங்கள் குறைப்பு..!

ERP rates to be cut at 96% of gantries
ERP rates to be cut at 96% of gantries as road traffic declines amid COVID-19 outbreak

சிங்கப்பூரில் 96 சதவீத மின்னியல் சாலை கட்டண நிர்ணய (ERP) நுழைவுகளில் கட்டணம் குறைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அறிவித்துள்ளது.

COVID-19 பரவல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொய்வின்றி தங்களது பணிகளை மேற்கொண்டுவரும் முன்னிலை ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டு (காணொளி)..!

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய இணைப்புச் சாலைகளில் உள்ள நுழைவுகளில் S$2 வரை குறைக்கப்பட உள்ளது, ERP கட்டணங்கள் சில நுழைவுகளில் முற்றிலும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட், புகிஸ்-மெரினா சென்டர் மற்றும் ஷென்ட்டன் வே-சைனாடவுன் கோர்டன் ஆகிய பகுதிகளில் நுழையும் வாகனங்களுக்கு வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் ERP கட்டணம் ஏதும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்த திங்கள் முதல் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 பரவல் சூழ்நிலைகள் காரணமாக ERP வீதக் குறைப்புக்கள் வழக்கத்தை விட அதிகம் என்று LTA கூறியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 35 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு; 16 பேர் குணமடைந்தனர்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil