சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம்!
Photo: Tharman Shanmugaratnam/Facebook

 

வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (ஆகஸ்ட் 22) காலை தொடங்கியது.

சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

அதில், முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகிய சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

75 வயதாகும் இங் கொக் சொங், சிங்கப்பூர் நிதியமைச்சகத்தின் முதலீட்டு ஆய்வாளராகப் பணியைத் தொடங்கியவர், சிங்கப்பூர் நாணய வாரியம், அரசாங்க முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த உயர் பதவிகளையும், உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

66 வயதாகும் தர்மன் சண்முகரத்னம், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளைப் பயின்றவர். 2001- ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு ஜூரோங் குழுத்தொகுதியில் இருந்து முதன்முறையாக அனுப்பி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, துணைப் பிரதமர், நிதியமைச்சர், கல்வியமைச்சர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்துள்ள அவர், சிண்டாவின் அறங்காவலர் வாரியத்தின் தலைவராக உள்ளார்.

ஆர்ச்சர்ட் சாலை கலகம்: ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு

75 வயதாகும் டான் கின் லியான், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ‘NTUC Income’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.