ஆர்ச்சர்ட் சாலை கலகம்: ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு

indian-origin-singapore-jailed

ஆர்ச்சர்ட் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

இதில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 22 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரருடன் போலியான திருமணம் – கூடுதல் காலம் சிங்கப்பூரில் தங்குவதற்கு திட்டம்: சிக்கியவருக்கு சிறை

இந்நிலையில் இன்று ஆக.22 ஆம் தேதி 29 வயதான ஆடவர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

Concorde ஹோட்டல் மற்றும் ஷாப்பிங் மால் அமைந்துள்ள 100 ஆர்ச்சர்ட் சாலையில் காலை 6 மணியளவில் திரு முகமது இஸ்ரத் முகமட் இஸ்மாயிலைக் கொலை செய்ததாக அஸ்வைன் பச்சான் பிள்ளை சுகுமாரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் திரு இஸ்ரத் பல காயங்களுக்கு உள்ளானதாகவும், பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்தார் என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதில் காயமுற்ற மற்றொரு நபர் 23 வயதான ஆடவர் ஒருவர், இவர் பல காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக சொல்லப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் உட்பட மேலும் பத்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் ஆறு பேர் சட்டத்திற்குப் புறம்பான குழு உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் திரு இஸ்ரத்தை காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதில் கவிந்த் ராஜ் கண்ணன் (24), மனோஜ்குமார் வேலயநாதம் (31), மற்றும் ஸ்ரீதரன் இளங்கோவன் (28) ஆகியோர் அடங்குவர்.

இன்று குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரின் அடுத்த விசாரணை தேதி ஆகஸ்ட் 29 நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அஸ்வைனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

நேற்று திங்களன்று, சந்தேக நபர்களில் மூவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் 28 வயதான மெர்வின் வெரில் டாட், 32 வயதான பாலகிருஷ்ண சுப்ரமணியம் மற்றும் 25 வயதான சிஜேஷ் அசோகன் ஆகியோர் ஆவர்.

ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்