சிங்கப்பூரருடன் போலியான திருமணம் – கூடுதல் காலம் சிங்கப்பூரில் தங்குவதற்கு திட்டம்: சிக்கியவருக்கு சிறை

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

சிங்கப்பூரில் கூடுதல் காலம் தங்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் ஆணுடன் போலித் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு திங்கள்கிழமை (ஆக.21) ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த 30 வயதான Cao Rongrong என்ற அந்த பெண் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

வருகை அனுமதிச் சீட்டுக்கு அட்டைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஜூலை 9, 2022 அன்று சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் உள்ள Thai Village Restaurant இல் சிங்கப்பூரர் சென் வெய்யுவை (37) Cao திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றம் கூறியது.

திருமணத்துக்காக சென் சுமார் S$6,000 வெள்ளியை வெகுமதியாகப் பெற்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதன் பிறகு, பெண் தனது விண்ணப்பங்களில் பொய்யான தகவலை கூறி தனக்கென இரண்டு வருகை அனுமதி நீட்டிப்புகளைப் பெற்றுள்ளார்.

இதுபோன்ற குற்றங்கள் திருமணத்தின் புனிதத்தை சிதைத்துவிடும் என்றும் வழக்குரைஞர் கூறினார்.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்: 4 மில்லியன் S$10 நினைவு நாணயங்கள்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்