பட்டறையில் தீ விபத்து: 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Car catches fire at Kaki Bukit workshop
Singapore Incidents/Facebook

சிங்கப்பூர்: 2 காக்கி புக்கிட் அவென்யூவில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் பட்டறையில் கிறிஸ்துமஸ் (டிச. 24) ஈவினிங் அன்று தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று முன்தினம் டிச.24 அன்று மதியம் 1:20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்தியரை நோக்கி காரி துப்பி, நடுவிரலை காட்டி இனவெறுப்பு தாக்கு – உடைந்துபோன ஊழியர் போலிசில் புகார்

முதல் தளத்தில் அமைந்துள்ள பட்டறையில் இருந்த காரில் தீப்பிடித்ததாக SCDF குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவிகளைப் பயன்படுத்தி SCDF வீரர்கள் தீயை அணைத்தனர்.

பாதிப்புக்கு உள்ளான இடத்தில் இருந்து மொத்தம் 20 பேர் காவல்துறை மற்றும் SCDF மூலம் வெளியேற்றப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

சிங்கப்பூர் மணி எக்ஸ்சேன்ஞ்: வேலைகள், பயணங்கள் அதிகரிப்பு – உச்சத்தை தொடும் வர்த்தகம்