KPE விரைவுச்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

KPE விரைவுச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள்… செப். 1 முதல் இது கட்டாயம்

அன்று மாலை 5.50 மணிக்கு தெம்பனீஸ் சாலை வெளியேறும் முன் கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் (KPE) தெம்பனீஸ் விரைவுச்சாலை (TPE) நோக்கி செல்லும் வழியில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF படைக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பான வீடியோ ஒன்று SG Road Vigilante ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்டது.

காரின் என்ஜின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தண்ணீர் பீச்சியடிக்கும் கருவி மூலம் தீ அணைக்கப்பட்டதாகவும் SCDF கூறியது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து SCDF விசாரணை நடத்தி வருகிறது.

Video: https://www.facebook.com/watch/?v=318147567239208

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லாரியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர்.. முதலாளி இழப்பீடு வழங்க வேண்டும் – தீர்ப்பு