உலு பாண்டன் சமூக கிளப்பில் கார் மோதி விபத்து – 2 மருத்துவமனையில் அனுமதி

(Photo: Fauzul Hakim via CNA)

உலு பாண்டன் சமூகக் கிளப் மீது நேற்று (அக். 22) மாலை கார் மோதியதில் ஓட்டுநர் மற்றும் அவரது பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் 170 கிம் மோ சாலையில் (Ghim Moh Road) நடந்த விபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!

இதில் 70 வயதான ஓட்டுநர் மற்றும் அவரது 66 வயதான பெண் பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவாக இருந்ததாக அவர்கள் கூறினர்.

விபத்தில் சிக்கிய அவர்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

அதன் நுழைவாயிலின் வலது பக்கத்தில் கண்ணாடி உடைந்திருப்பதைக் கண்டதாக கட்டிடத்தில் பணிபுரியும் திரு ஃபௌசுல் ஹக்கீம் என்பவர் கூறினார்.