தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!

Singapore covid-19
(PHOTO: Lawrence Wong)

வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சு ஊழியர்களுக்காக தங்குவிடுதியில் 5000 படுக்கைகளை ஒதுக்கியுள்ளது.

இதற்கு முன், 48க்கும் மேற்பட்ட தங்குவிடுதிகளில் 6000க்கும் மேற்பட்ட படுக்கைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமியினால், அக்டோபரில் மட்டும் 169 பேர் உயிரிழப்பு!

இப்படுக்கை வசதிகள் ஒவ்வொரு தங்குவிடுதிகளின் மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு மருத்துவ வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று மனிதவள அமைச்சர் டான் சி லெங் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அவர்கள் குணமடைவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வளாகங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட வளாகங்களிலிருந்து கிட்டதட்ட 7500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கி குணமடைந்து, தங்களுடைய தங்குவிடுதி அறைகளுக்கு ஆரோக்கியமாக சென்றுள்ளனர் என்று டாக்டர் கோ தெரிவித்தார்.

இவ்வாறு வெளிநாட்டு ஊழியர்களின் நன்மைக்காக, சிங்கப்பூர் அரசு பல்வேறு வசதிகளையும், மேம்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 கட்டுபாடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடை முதலாளிகளுக்கு பெரும் நெருக்கடி!