கோவிட்-19 கட்டுபாடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடை முதலாளிகளுக்கு பெரும் நெருக்கடி!

Photo:CNBCFM

கோவிட்-19 தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதால், அதனை கட்டுபடுத்த, நவம்பர் 21ம் தேதி வரை கட்டுப்பாட்டை சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது.

இதனால் உணவு, பானம் மற்றும் இதர கடைகள் நடத்தும் முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் நெருக்கடிக்கும், கவலைக்கும் ஆளாகியுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

சிங்கப்பூர் அரசு கோவிட்-19 தொற்று காரணமாக, ஒரே ஆண்டில் பல்வேறு முறை ஊரடங்கும், கடைகளுக்குபலதடவை கடுமையான கட்டுபாடுகளும் விதிக்கப்படுவதால் நடுத்தர வர்த்தகங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்று சிங்கப்பூர் வாடகைதாரர் குழு தெரிவித்தது.

கோவிட்-19 தாெற்று அதிகரிப்பதால் சுகாதார பராமரிப்பில் பலநெருக்கடிகள் ஏற்படுவதால் அரசு அடிக்கடி கட்டிப்பாடுகளை நீட்டித்துக் கொண்டேயிருப்பதால், சிறு தாெழில் செய்பவர்கள் மற்றும் நடுத்தர தொழிலக வர்த்தகங்கள் பெரும் பொருளாதார பாதிப்படைந்து முடங்கி வருகிறது என்றனர் அக்குழுவினர்.

அதாவது, உணவுக்கடைகளில் அதிகமானோர் கூடக்கூடாது, இசை ஒலிக்கக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருக்கையில், அதிக சத்தத்துடனும், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் முகக் கவசமும் இன்றி உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வது எப்படி சாத்தியம் என்று Save FNBSG குழுவைச் சார்ந்த ஒருவர் கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் கோவிட்-19 தொற்றின் காரணமாக 500க்கும் மேற்பட்ட பல நடுத்தர தொழில்கள் முடக்கம் அடையும் போது இக்குழு, அந்த நிறுவனங்களுக்கு பக்கபலமாக இருந்து, பல்வேறு உதவிகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தில் இருந்து 5 அல்லது 6 பேருக்கு மேல் உணவுக் கடைகளுக்கு சென்று ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதினால் தடை விதிப்பதற்கான காரணம் என்ன என்று சில மக்கள் சந்தேக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேபோன்று, மருத்துவமனைகளில் வரும் கோவிட்-19 தாெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது என்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருக்கும்போது கட்டுபாடுகள் விலக்கப்படும் என்று சிலர் வினாவினர்.

இப்படி ஒவ்வொரு வியாபாரத்தை சார்ந்த முதலாளிகளும், ஒரு சில சமூக ஆர்வலர்களும் சிறு தொழில் செய்பவர்களின் கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமாக சில கேள்விகளை எழுப்புகின்றனர்.

இதுபோல் மற்றொருவர், விமானத்தில் அருகில் அமர்ந்திருக்கும் பயணிகள் தங்களுடைய முகக்கவசத்தை விளக்கிவிட்டு உணவு உண்பதற்கு அனுமதிக்கும் போது, ஏன் உணவுக் கடைகளில் அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்டுப்பாடுகள் நீட்டிப்பதால் தொழில் சரிந்து, சரியான முறையில் வாடகை கொடுக்க இயலவில்லை என்றும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தடுமாறுவதாகவும், நடுத்தர வர்த்தகம் செய்யும் முதலாளிகள் கவலையுடன் தங்கள் நெருக்கடியான நிலையை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் அடுத்த மாதம் வரை கோவிட்-19 கட்டுபாடுகள் செயல்படுமென அறிவிப்பு!