தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

little india illegally working 47 people investigated

கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டத்தை நிர்வகிப்பது குறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் கூறிய தகவல்களை மேற்கோள் காட்டி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்துவதில் தடுமாற்றம்!

கடை வளாகம் முழுவதும் கூட்டம் பரவுவதை உறுதி செய்வது, மேலும் உச்ச நேரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது போன்றவை அதில் மேற்கொள்ளப்படும்.

லிட்டில் இந்தியா கடைகள் மற்றும் உணவகங்களால் நிரம்பியுள்ளது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருட்களின் வகைகளை அங்கு காணலாம்.

அங்கு பண்டிகை மனநிலையை உருவாக்கும் வண்ணம் ஆண்டுதோறும் அலங்கார விளக்குகள் அமைக்கப்படும்.

தீபாவளி வாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையை விரிவுபடுத்துவதற்காக சில வணிகங்களின் செயல்பாட்டு நேரம் நீட்டிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தை நிர்வகிக்க உதவுவதற்காக தீபாவளி வரையில் உச்ச நேரங்களில் அமலாக்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளி தூதர்களை பணியில் அமர்த்தப்படுவர் என STB கூறியுள்ளது.

மேலும், உச்ச நேரங்களில் சில பாதைகள் மூடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் மேலும் 16 பேர் உயிரிழப்பு!