கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்துவதில் தடுமாற்றம்!

NTUC launches engagement exercise to workers
Photo: Today

ஜூரோங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் தங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்ளுக்கு கோவிட்-19 தொற்றுப் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட இந்த ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதில் பல்வேறு சிக்கல்களும் தடுமாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

இவ்விடுதியில் ஏற்பட்ட இந்த தடுமாற்றங்களுக்கு, ஆரம்பத்திலிருந்தே வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் இருந்த பல குறைபாடுகளும், தடைகளுமே காரணம் என்று வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூரோங் தங்குவிடுதியில் வசிக்கும் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை பரிசோதனைக்காக அனுப்புவதிலும், சுற்றச்சூழல் பராமரிப்பு போன்ற செயல்பாடுகளிலும் பெரும் தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் கடந்த சில நாட்களாக விடுதியின் நிர்வாகத்தினருக்கும், விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே பல முரண்பாடான வாக்குவாதங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தைச் சேரந்த அமைப்பும், இதர தொழிற்சார்ந்த மற்ற அமைப்புகளும் தங்குவிடுதியில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளுக்கான காரணங்களையும் ஆய்வு செய்துள்ளனர்.

தங்குவிடுதியில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டனவா, விடுதியில் தங்கியிருக்கும் ஊழியர்கள் மனநலம் மற்றும் உடல்நலம் எவ்வாறு இருக்கின்றது என்பதை இந்த அமைப்புகள் ஆராய்ச்சி செய்து ஊழியர்களின் சூழ்நிலைகளை தெரிவித்தனர்.

தங்கு விடுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அறிந்து, மனிதவள அமைச்சு உடனடியாக விரைந்து செயல்பட்டு விடுதியில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதாக திரு. இயோ தெரிவித்தார்.

விடுதியின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு செயல்படுத்தப்பட்ட பிறகு, தங்குவிடுதியில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், தொற்று ஏற்பட்டவர்களுக்கான இடமாற்றம் உடனுக்குடன் நடைப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதாவது முறையாக கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட விடுதிவாசிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு எந்தவித தொற்றின் அறிகுறிகள் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தும் அறையில் அவர்கள் 10 நாட்கள் வரை தங்குவதே, புதிதாக கொண்டுவரப்பட்ட நடைமுறையாகும்.

இருப்பினும் தற்போது தங்குவிடுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளாலும், செயல்பாடுகளாலும் விடுதியில் வசிப்பவர்கள் சற்று தெளிவடையாமலே இருக்கின்றனர்.

இதனால் பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துவது போன்ற விஷயங்களில் தடுமாற்றம் ஏற்படலாம் என்றார் அவர்.

இவ்வாறு ஆய்வு செய்த ஊழியர்களுக்கான அவ்வமைப்பு, தங்குவிடுதியின் தற்போதைய நிலைப் பற்றி மனிதவள அமைச்சிடம் விவரித்துள்ளதாக திரு. இயோ கூறினார்.

சிங்கப்பூரில் அக். மற்றும் நவ. மாதங்களில் இலவசமாக வழங்கப்படும் “Mouth gargle”