சிங்கப்பூரில் அக். மற்றும் நவ. மாதங்களில் இலவசமாக வழங்கப்படும் “Mouth gargle”

Temasek Foundation

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் Mouth Gargle என்னும் வாய் கொப்பளிக்கும் திரவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு சதவிகிதம் போவிடோன்-அயோடின் (PVP-I) கொண்ட அந்த திரவம், Temasek அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டுக்கான ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்கள்!

PVP-I மூலப்பொருள், தொண்டை புண் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் போன்ற கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

மேலும், இது அதன் “Stay Prepared” முன்முயற்சியின் கீழ் விநியோகிக்கப்படுகிறது.

இந்த திரவம் இரண்டு கட்டங்களாக விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இதனை சுயமாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 25 மில்லி அளவிடும் கப்பும், 250 மிலி திரவமும் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத 800க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர் – NEA