சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத 800க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர் – NEA

(photo: mothership)

கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி போடாமல், கடந்த வாரத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் உணவங்காடி நிலையங்களில் உணவருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல உணவங்காடி நிலையங்களில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் கோவிட் -19 பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதற்காக 92 பேர் பிடிபட்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்திட்டம் – சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் வந்தனர்

இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஒன்று கூடுவது, குறைந்தது 1மீ தூரம் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாதது மற்றும் முகக்கவசம் அணியாதது ஆகியவை அந்த குற்றங்களில் அடங்கும்.

இந்த புள்ளிவிவரங்களை, தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி-வேறுபாடு பாதுகாப்பு நடவடிக்கைகளின்கீழ், கோவிட் -19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவதற்கு அக்டோபர் 13 முதல் அனுமதி வழங்கப்பட்டது.

எனவே, தடுப்பூசி போடாத அல்லது முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள், உணவங்காடி நிலையங்களில் உணவை பார்சல் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.

மேலும், இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் தடுப்பூசி போடப்படாவிட்டாலும் கூட உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 23,100 மாத்திரைகள் பறிமுதல் – ICA