சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 23,100 மாத்திரைகள் பறிமுதல் – ICA

ICA/FB

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக ஐந்து முயற்சிகளில் இறக்குமதி செய்த மொத்தம் 23,100 ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரைகளை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) பறிமுதல் செய்துள்ளது.

பேஸ்புக் பதிவில் இதுபற்றி ICA கூறியதாவது; செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 6 வரை, சாங்கி சரக்கு விமானப் போக்குவரத்து நிலையம் மற்றும் ஏர்மெயில் டிரான்ஸிட் சென்டர் (ஏர் கார்கோ கமாண்ட்) ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் அந்த பார்சல்களைக் கண்டறிந்தனர்.

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

கடந்த செப்டம்பர் 10 அன்று கண்டறியப்பட்ட 3,200 மாத்திரைகள் அடங்கிய முதல் பார்சலில் அது என்ன பொருள் என்ற எந்த அறிவிப்பு இல்லை.

3,500 மாத்திரைகள் அடங்கிய இரண்டாவது பார்சலில் சுகாதாரப் பொருட்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதே போல, செப்டம்பர் 21 அன்று, 2,400 மாத்திரைகள் அடங்கிய பார்சல் துணை மருந்து தயாரிப்பு என்ற அறிவிப்பின் கீழ் கண்டறியப்பட்டன.

சட்டவிரோதமான இறக்குமதி, விற்பனை மற்றும் ஐவர்மெக்டின் உள்ளிட்ட மருந்துகளை வழங்குவோருக்கு எதிராக சுகாதார அறிவியல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை எதிரொலி – சிங்கப்பூரில் அதிகரிக்கும் தடுப்பூசி விகிதம்