வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

Photo: MOH

ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காக 3000க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் அறைகள் அமைக்கப்பட்டுள்து. தற்போது இவ்விடுதியில் 2800 ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் வசிக்கும் செம்பகார்ப் மரின் நிறுவனத்தைச் சேர்ந்த 1400 ஊழியர்களுக்கு கோவிட்-9 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை எதிரொலி – சிங்கப்பூரில் அதிகரிக்கும் தடுப்பூசி விகிதம்

இப்போது தடுப்பூசிப் போட்ட 1400 ஊழியர்களில் 43% பேரின் காேவிட்-19 தடுப்பூசி போட்டதற்கான சான்றுகள் சிங்கப்பூரின் தேசிய நோய்த்தடுப்பு பதிவேட்டில் பதியவைக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன் ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களில் 55% பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் கணக்கீடு செய்யும் போது, ஜூரோங் தங்குவிடுதியில் உள்ள ஊழியர்களில் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூரோங் தங்குவிடுதியில் வசிக்கும், செம்பகார்ப் மரின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் அண்மையில் தான் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

அதில் ஏராளமான ஊழியர்கள், தங்களுடைய சொந்த நாட்டிலேயே கோவிட்-19 தடுப்பூசிப் போடப்பட்ட பிறகுதான் சிங்கப்பூர் வந்ததுள்னர் என்ற தகவல்களை செம்பகார்ப் மரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய ஊழியர்களின் பாதுகாப்பு, தங்கியிருக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கட்டுப்பாடாக வைத்திருப்பதாகவும், தங்களுடைய மேற்பார்வையிலேயே அவற்றை கண்காணித்து வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொது சுகாதார நெறிமுறைகள் பற்றியும், சிங்கப்பூரின் கோவிட்-19 தடுப்பூசி செயல்பாடு பற்றியும் தங்களுடைய ஊழியர்களுக்கு செம்பகார்ப் மரின் நிறுவனம் விவரித்து வருகிறது.

தங்களுடைய ஊழியர்கள் சரியான நேரத்தில் முறையாக கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனரா என்பதை மேற்பார்வையிட மனிதவள அமைச்சிற்கும் நினைவூட்டி வருகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ஒரு வாரங்களுக்கு முன் வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கும், அவ்விடுதியின் நிறுவனத்திற்கும் இடையே, முறையான கோவிட்-19 பாதுகாப்பு மருத்துவ வசதி இல்லாததால் பல்வேறு முரண்பாடுகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டது.

இப்பிரச்சினையில் அங்கு வசிக்கும் ஊழியர்களுக்கு முறையான மருத்துவ வசதி இல்லையென்றும், கெட்டுப்போன உணவுகளே உண்ண உணவாக கிடைப்பதாகவும் போன்ற தகவல்கள் மனிதவள அமைச்சுக்கு தெரிய வந்துள்ளது.

இதன் பிறகு மனிதவள அமைச்சு அதிகாரிகள் அவ்விடுதிக்கு சென்று ஆய்வு செய்து, அவ்விடுதியின் நிர்வாகத்தினரிடமும், ஊழியர்களிடமும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடக்கும் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு நோக்கும் போது, மனிதவள அமைச்சு அவ்விடுதியில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்து வருவது தெரிய வருகிறது.

சிங்கப்பூரில் புதிதாக 2,553 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – ஆறு பேர் பேர் உயிரிழப்பு