தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்திட்டம் – சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் வந்தனர்

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத்திட்டத்தின்கீழ் சுமார் 250 பயணிகள் இன்று (அக்டோபர் 20) காலை சாங்கி விமான நிலையம் வந்திறங்கினர்.

கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட, தனிமை இல்லாத பயணத் திட்டத்தின்கீழ் முதல் இரண்டு விமானங்கள் வந்தடைந்தன.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 23,100 மாத்திரைகள் பறிமுதல் – ICA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் நெதர்லாந்திலிருந்து SQ329 என்ற விமானம் சுமார் 6.35 மணிக்கு சுமார் 80 பயணிகளுடன் வந்தடைந்தது.

அதே போல, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, SQ317 விமானம் லண்டனில் இருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் வந்தது.

முதல் விமானம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு அல்லது சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டது.

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது…